News October 30, 2025
+2 தேர்ச்சி.. ரயில்வேயில் வேலை: அப்ளை பண்ணுங்க

RRB மூலம் 3,058 NTPC Non Graduates பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2 தேர்ச்சி, சில பணிகளுக்கு டைப்பிஸ்ட் அவசியம். வயது வரம்பு: 18 – 30. சம்பளம்: Commercial Cum Ticket Clerk – ₹21,700. இதர பணியிடங்களுக்கு ₹19,900 அடிப்படை ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கே <
Similar News
News October 30, 2025
சீனா மீதான வரியை குறைத்த டிரம்ப்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தென்கொரியாவில் சந்தித்து பேசினார் அதிபர் டிரம்ப். அப்போது வரி விதிப்பு, வர்த்தகம், இருநாட்டு உறவு பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் விளைவாக சீனா மீதான இறக்குமதி வரியில் 10%-ஐ குறைத்துள்ளார் டிரம்ப். இந்த சந்திப்பு மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்டுள்ள அவர், அரிய மண் கனிமங்களை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
News October 30, 2025
BREAKING: பசும்பொன்னில் அரசியல் திருப்பம்

தேவர் குருபூஜை நாளான இன்று அரசியல் ரீதியாக அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. பசும்பொன்னில் EPS-க்கு எதிராக டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒன்றாக இணைந்தனர். இச்சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே சீமானை தோளில் கைப்போட்டு வைகோ அழைத்து வந்தார். மதிமுகவினரும், நாதகவினரும் மோதி வந்தனர். தற்போது இருவரும் இணக்கமாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
News October 30, 2025
சீனாவும் USA-வும் கூட்டாளிகள்: ஜி ஜின்பிங்

சீனாவும் USA-வும் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் வலுவாக இருக்கும் 2 நாடுகளுக்கிடையே அவ்வப்போது உராய்வுகள் இருப்பது இயல்புதான். இருந்தாலும் வளர்ச்சிக்கான சூழலை உருவாக்க டிரம்ப்புடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார். மேலும், உலக அமைதி பற்றி டிரம்ப் அக்கறையுடன் உள்ளதாகவும் புகழ்ந்துள்ளார்.


