News September 29, 2024

பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காத 2 அமைச்சர்கள்

image

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், சிவசங்கர் பங்கேற்கவில்லை. தாயாருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மதுரை சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், விமானம் தாமதம் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம், அமைச்சர் சிவசங்கர் லண்டனில் உள்ளதால் நிகழ்ச்சியில் முடியவில்லை.

Similar News

News August 11, 2025

கில்லுக்கு துணை கேப்டன் பதவி.. நெருக்கடியில் ஹர்திக்?

image

Asia cup-ல் VC-யாக கில் நியமிக்கப்படுவது, ஹர்திக் பாண்ட்யாவுக்கு நெருக்கடியை உருவாக்கலாம் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சூர்யகுமார் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், அவருக்கு பதிலாக ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. அவர் இத்தொடரில் சொதப்பினால், சூர்யகுமார் கேப்டனாகவும், கில் VC-யாகவும் நியமிக்கப்படலாம். இது ஹர்திக்குக்கு கூடுதல் நெருக்கடியை உருவாக்கலாம்.

News August 11, 2025

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை என்ன?

image

‘மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ என்ற பெயரில் ஆக.1 முதல் தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்: *மாநகராட்சியின் 5, 6, 7-ம் மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். *10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். *மாநகராட்சியின் அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும்.

News August 11, 2025

10வது நாள்… வலுக்கும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

image

சென்னையில் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால், நகரின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3,000 மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நடத்திவரும் போராட்டம் 10-வது நாளை எட்டியுள்ளது. மாநகராட்சியின் 5, 6, 7-ம் மண்டலங்களில் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து போரட்டம் தொடங்கிய நிலையில், அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

error: Content is protected !!