News December 31, 2024
IT துறையில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்பு

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 2030ம் ஆண்டுக்குள் இந்திய IT துறையில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கெஸ் IT ஸ்டாப்பிங் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பில், குவாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில்நுட்பங்கள் மட்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும், அதிகபட்சமாக பெங்களூருவில் 43.5% வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
Similar News
News September 10, 2025
Parenting: ஆண் குழந்தைகளுக்கும் இதை சொல்லிக் கொடுக்கலாமே!

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு பெற்றோர்கள் GOOD TOUCH, BAD TOUCH சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால், ஆண் குழந்தைகளுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு தேவைப்படும் என பலருக்கு தெரிவதில்லை. ஆண் குழந்தைகளும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதால் அவர்களுக்கும் GOOD TOUCH, BAD TOUCH சொல்லிக்கொடுப்பது அவசியமாகிறது. உங்கள் குழந்தைகளுக்கு இதை இன்றே கற்பியுங்கள். SHARE.
News September 10, 2025
BREAKING: செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டார்

RB உதயகுமாரின் தாய் குறித்து பேசியதற்கு செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டுள்ளார். செங்கோட்டையனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து RB உதயகுமார் வீடியோ வெளியிட்டார். அதுகுறித்து கேட்டபோது, ‘அவரது தாய் இறந்துவிட்டார், முதலில் அதை பார்க்கச் சொல்லுங்கள்’ என செங்கோட்டையன் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட அவர், RB உதயகுமாரின் தாயாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன் என்றார்.
News September 10, 2025
இந்தியாவின் சுழலில் தடுமாறும் UAE

ஆசியக்கோப்பையில் முதலில் பேட்டிங் செய்துவரும் UAE இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணியில் இணைந்த குல்தீப் யாதவ், 2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 10.3 ஓவர்கள் முடிவில் UAE 6 விக்கெட்டுகளுக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் அந்த அணி 100 ரன்களை தாண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.