News June 26, 2024
அரையிறுதியில் நாளை 2 போட்டிகள்

T20 WC தொடர் அரையிறுதியை எட்டியுள்ளது. இந்திய நேரப்படி, நாளை காலை 6 மணிக்கு நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஃப்கானிஸ்தான்-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் வெற்றி பெறும் அணிகள், பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
Similar News
News December 5, 2025
FLASH: சற்றுநேரத்தில் நாடே எதிர்பார்க்கும் அறிவிப்பு

RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, இன்னும் சற்றுநேரத்தில் நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் REPO RATE குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார். 3 நாள்களாக நடைபெற்ற MPC கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் வெளியிட உள்ளார். இதில், ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைக்கவும் (அ) 5.5% அளவிலேயே தொடரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரெப்போ விகிதம் குறைந்தால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.
News December 5, 2025
இந்தியாவில் ரஷ்ய அதிபர் புடின் PHOTOS

நேற்றிரவு இந்தியாவில் தரையிறங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர், விமான நிலையத்தில் இருந்து புடின், தான் வழக்கமாக பயணிக்கும் காரில் ஏறாமல், பிரதமர் மோடி காரில் பயணித்தார். இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. புடின் வருகை தொடர்பான போட்டோக்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 5, 2025
விமானப்படையில் வேலை, டிகிரி போதும்: APPLY NOW

விமானப்படையில் Flying and Ground Duty பணிகளில் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 20 – 26 வயது வரை. தகுதி: திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப பிரிவில் தரைத்தளப் பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு: உடற்தகுதி, உளவியல் சோதனை, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.14. விண்ணப்பிக்க இங்கே <


