News April 16, 2025
சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டர்

சத்தீஸ்கரில் 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் மாவோயிஸ்ட் கமாண்டர் உள்ளிட்ட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.13 லட்சம் வெகுமதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
Similar News
News December 18, 2025
கிரிக்கெட்டில் இவங்கள அடிச்சிக்க ஆளேயில்லை

கிரிக்கெட்டில் ஆல் டைம் பெஸ்ட் ODI பேட்ஸ்மென் தரவரிசை பட்டியலை espn cricinfo வெளியிட்டுள்ளது. இதில், சச்சின் வழக்கம்போல் முதலிடத்தில் இருக்கிறார். கோலி, ரோஹித் ஆகியோர் எந்த இடங்களில் இருக்கின்றனர் என்று தெரியுமா? அதேபோல், வேறு எந்த பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 18, 2025
Welcome to my world… வரவேற்ற அஜித்

அஜித்தின் ரேஸிங் பற்றி ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தியுள்ள விஜய், இப்படம் ஆவணப்படமா (அ) படமா என்பது பற்றி அஜித் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார். அஜித் சார் அழைத்ததும் உடனடியாக அங்கு சென்றதாக தெரிவித்த விஜய், ‘Welcome to my world’ என தன்னை அன்போடு அஜித் அழைத்ததாகவும் கூறி நெகிழ்ந்துள்ளார்.
News December 18, 2025
காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார் விஜய்

ஈரோடு மக்கள் சந்திப்பை பிரமாண்டமாகவும், பாதுகாப்புடனும் ஏற்பாடு செய்த செங்கோட்டையனுக்கும், போலீஸுக்கும் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். மக்களை சந்திக்க புறப்பட்டதில் இருந்தே பல தடைகள் தொடர்ந்து வருகின்றன. அதையெல்லாம் மக்களின் பேராதரவுடன் முறியடித்து வருகிறோம். அந்த வகையில், ஈரோட்டில் நடந்த சந்திப்பு, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


