News September 27, 2025
+2 போதும்.. மத்திய அரசில் ₹25,500 சம்பளத்தில் வேலை!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) காலியாக உள்ள 552 Head Constable பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-வது அல்லது +2 முடித்த 18- 27 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி, உடற்தகுதி, மெடிக்கல் டெஸ்ட் உள்ளிட்ட 5 தேர்வுகள் நடைபெறும். மாதம் ₹25,500- ₹81,100 வரை வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
Similar News
News January 9, 2026
78 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு விநியோகம்: தமிழக அரசு

தமிழ்நாட்டில் இதுவரை 78,30,523 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு, ரொக்கப்பணம் ₹3,000 வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 1 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும், நேற்றும், இன்றும் பொங்கல் பணத்தை வாங்க முடியாதவர்கள், ரேஷன் கடை ஊழியர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 9, 2026
திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

மாணிக்கம் தாகூர் X தள பதிவு, திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021 தேர்தலில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுக MLA-களின் பட்டியலை வெளியிட்டு, அரசவை கவிஞர்களும், ஐடி விங் மகான்களுக்கும் நல்ல பாடம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, கூட்டணி இல்லாமல், திமுக தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பதை மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 9, 2026
டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை

தமிழகத்தில் இம்மாதம் டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் தினமான ஜன.16, குடியரசு தினமான ஜன.26 ஆகிய தேதிகளில் அனைத்து டாஸ்மாக் கடைகள், அனைத்து வகையான பார்களை கட்டாயம் மூட வேண்டும். இந்த நாள்களில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


