News December 27, 2024
2 வீடு, ஒரு மாருதி 800 கார்: 10 ஆண்டு பிரதமரின் முழு சொத்து

பிரதமராக 10 ஆண்டுகள் (2004-14) பதவி வகித்த மன்மோகன் சிங், 2018ல் ராஜ்யசபாக்கு வேட்புமனு தாக்கல் செய்தபோது, அவரிடம் ₹15.77 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டார். டெல்லி, சண்டிகரில் 2 FLAT, மாருதி 800 கார், SBI, தபால் வங்கிகளில் டெபாசிட் இருப்பதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். மேலும், தனக்கு கடன் இல்லை என குறிப்பிட்டது அவரின் நிதி ஒழுக்கத்திற்கான சான்றாகும்.
Similar News
News July 9, 2025
பும்ராவுக்கு போட்டியாக ஆர்ச்சரை களமிறக்க வாய்ப்பு

இந்தியா – இங்கி., எதிரான 3வது டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. இந்திய அணியில் பும்ரா இணைவார் என தகவல்கள் உள்ளன. அதைப்போன்று இந்திய அணிக்கு செக் வைக்கும் வகையில் இங்கி., அணியில் ஆர்ச்சரை களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ச்சர் நல்ல உடற்தகுதியுடன் தயாராக இருப்பதாக இங்கி., பயிற்சியாளர் மெக்கல்லமும் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
திருமாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்: இபிஎஸ் சாடல்

அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாக் கூட்டணி என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்திருந்தார். இதுபற்றி பேசிய இபிஎஸ், அதிமுகவும், பாஜகவும் இணக்கமாக இல்லை என திருமா கண்டுபிடித்துவிட்டாரா? டாக்டர் பட்டம் கொடுக்கலாம் என்றார். எங்களுக்கும் கூட்டணி கட்சிக்கும் விளக்கம் சொல்வதற்கு அவர் யார்? என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் NDA கூட்டணிக்கு இபிஎஸ் தான் தலைவர் என அமித்ஷா கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.
News July 9, 2025
நான் கைதாகவில்லை: சௌபின் சாஹிர் விளக்கம்

மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்புக்கு ₹7 கோடியை கடனாக பெற்றுக்கொண்டு அசல் தொகையோ, 40% லாபத்தையோ <<16994564>>சௌபின் சாஹிர்<<>> தராததால் அவர் கைதாகி சொந்த ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய சௌபின் சாஹிர், தன்னை யாரும் கைது செய்யவில்லை என்றும், தன் பக்கம் நியாயங்களை உணர்த்தும் வகையிலான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை, நீதிமன்றத்திடம் சமர்த்திருக்கிறேன், விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றார்.