News August 3, 2024
+2 படித்தவர்களுக்கு வாய்ப்பு: 2006 அரசு பணியிடங்கள்

ஸ்டெனோகிராபர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பதவிக்கு மொத்தம் 2006 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிரேடு ‘சி’-க்கு 18-30, கிரேடு ‘டி’ 18-27 வயதிற்குள் இருக்க வேண்டும். +2 படித்தவர்கள், https://ssc.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி மற்றும் புதுச்சேரியில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Similar News
News November 2, 2025
BREAKING: வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்…

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருத்தம் மேற்கொள்ளும் அவகாசம் அக்.31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது, நவ.7(வெள்ளிக்கிழமை) வரை திருத்தம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பயன்படுத்திக்கோங்க மாணவர்களே!
News November 2, 2025
Cinema Roundup: ரஜினியின் புது பட அப்டேட்

*கவுதம் கார்த்திக் நடித்து வந்த ‘ரூட்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. *‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார், மீண்டும் படம் இயக்கும் பணிகளை தொடங்கியுள்ளார். *ரஜினியின் அடுத்த படம் பற்றிய அப்டேட், கமல் பிறந்தநாளான வரும் 7-ம் தேதி வெளியாகும் என தகவல். *‘பாட்ஷா’ பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, அடுத்ததாக சத்ய சாய் பாபா பற்றி ‘அனந்தா’ என்ற பக்தி படத்தை இயக்குகிறார்.
News November 2, 2025
4 ராசிகளுக்கு பண மழை கொட்டும்

ஜோதிட கணிப்பின்படி, செவ்வாய் – புதன் சேர்க்கை நிகழ்ந்திருப்பதால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *கடகம்: நிதி நிலை உறுதியாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். *விருச்சிகம்: தொழிலில் முன்னேற்றம். எடுக்கும் முடிவுகளில் வெற்றி கிடைக்கும். *மகரம்: நிதி சார்ந்த பலன்கள் அதிகரிக்கும். வருமானம் உயர வாய்ப்பு. *மீனம்: வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். சவால்கள் இருந்தாலும் வெற்றி நிச்சயம்.


