News October 24, 2024
+2 மாணவியை கடத்திய பெண் கராத்தே மாஸ்டர்!

சென்னையில் 17 வயது + 2 மாணவி, இரு தினங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. போலீஸ் விசாரணையில் அந்த மாணவியுடன் அவரது கராத்தே மாஸ்டரான 27 வயது பெண், லெஸ்பியன் உறவில் இருந்ததும், திருமணம் செய்யும் நோக்கில் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இந்நிலையில், அவர்களை தூத்துக்குடியில் மடக்கிய போலீஸார் மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். கராத்தே மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
காமன்வெல்த் செஸ் போட்டியில் கேரள சிறுமி சாம்பியன்

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் காமன்வெல்த் செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான செஸ் போட்டியில் கேரளாவின் திவி பிஜேஷ் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். 9 சுற்றுகள் முடிவில், 8.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தையும் அவர் வென்றார். கேரளாவில் இருந்து இளம் வயதில் மாஸ்டர் டைட்டில் வெல்லும் முதல் வீராங்கனை என்ற பெருமையையும் திவி பெற்றுள்ளார்.
News November 17, 2025
திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியீடு

திருப்பதி ஏழுமலையானை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வழிபட ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை(நவ.18) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. அதேபோல் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவற்றுக்கான தரிசன டிக்கெட்டுகள் 21-ம் தேதி வெளியிடப்படுகிறது. தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளமான <
News November 17, 2025
BREAKING: பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் இன்று(நவ.17) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சற்று நேரத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


