News May 8, 2025
+2 தேர்வு முடிவுகள்: மாநில அளவில் 2 பேர் முதலிடம்

+2 பொதுத்தேர்வில் 2 மாணவர்கள் மாநில அளவில் 599 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர். பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். அதேபோல், தாராபுரத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரரின் மகன் ராகுல் என்பவரும் ஆங்கிலத்தை (99) தவிர, மற்ற அனைத்து பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.
Similar News
News November 6, 2025
மதியத்திற்கு மேல் அரைநாள் விடுமுறையா?

கனமழையால் இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தி.மலை, வேலூர், விழுப்புரம், காஞ்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 1 மணி வரை மழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக IMD எச்சரித்துள்ளது. அதேபோல், மதியத்திற்கு மேல் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அரை நாள் விடுமுறை அளிக்கப்படுமா என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
News November 6, 2025
மும்பையில் இது முடியாது: BJP நிர்வாகி கருத்தால் சர்ச்சை

நியூயார்க்கில் இந்திய வம்சாவளி முஸ்லிம் வேட்பாளரான ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றதை ஒப்பிட்டு, மும்பை பாஜக நிர்வாகி அமித் சதாம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கான் என்ற பெயர் கொண்ட எவரும் மும்பையில் மேயராக வரமுடியாது என்ற அவர், இது ஒருபோதும் நடக்காது என கூறியுள்ளார். ஆனால் மும்பையில் இதை நடத்திக்காட்ட சிலர் முற்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
பிஹார் தேர்தல்: 9 மணி வரை 13% வாக்குப்பதிவு

பிஹாரில் உள்ள 243 தொகுதிகளில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வரும் நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 13% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் 3.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.


