News January 21, 2025

இனி வாரம் 2 நாள்கள் விடுமுறை?

image

வங்கிகளுக்கு தற்போது வாரம் 6 நாள் வேலைநாளாக உள்ளது. 2வது, 4வது சனிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது. இந்நிலையில், வாரம் 5 நாள் மட்டுமே வேலைநாளாக இருக்க வேண்டுமென்று வங்கி ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். இதற்கு வங்கிகள் கூட்டமைப்பும் ஒப்புதல் தந்துவிட்டது. தற்போது 8-வது ஊதிய கமிஷனை அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பையும் அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 6, 2026

தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $88 (இந்திய மதிப்பில் ₹8,077) குறைந்து $5,089.47-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1 குறைந்து $83.04-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 6, 2026

திமுகவிடம் DCM பதவி கேட்டாரா பிரேமலதா?

image

தேமு​தி​க​வுக்கு DCM பதவி வேண்​டும் என திமுகவிடம் பிரேமலதா கேட்​ட​தாக​வும், இதனால்தான் கூட்டணி தாமதமானது எனவும் சமீப​கால​மாக தகவல் பரப்​பப்​பட்டு வந்​தது. அதற்கு மறுப்பு தெரிவித்த பிரேமலதா விளக்​கமும் அளித்​திருக்​கி​றார். தாங்​கள் இது வேண்​டும், அது வேண்​டும் என்று யாரிட​மும் அடம் பிடித்​தது கிடை​யாது எனவும், மற்ற கட்​சிகளை போலவே தங்​களுக்​கான உரிய இடத்தை தாங்​கள் கேட்டதாகவும் கூறியுள்ளார்.

News March 6, 2026

கூட்டணி விஷயத்தில் ஸ்டாலின் அஞ்சினார்: TTV

image

NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என TTV தெரிவித்துள்ளார். திமுக-காங்., கூட்டணியில் அடித்துக் கொண்டு தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்தது போல் NDA கூட்டணியில் நடக்காது; சுமுகமாகவே பேச்சுவார்த்தை முடியும் எனக் கூறினார். மேலும், தவெகவுடன் காங்., சென்றுவிடுமோ என அச்சத்தில் இருந்த ஸ்டாலின் பேச்சுவார்த்தை முடிந்தபிறகு சமிக்ஞை காட்டி நிம்மதியை வெளிப்படுத்தியதாகவும் பேசினார்.

error: Content is protected !!