News December 15, 2024

நாளை பூமியை நெருங்கும் 2 விண்கற்கள்

image

2 பெரிய விண்கற்கள் நாளை பூமியை நெருங்கி வர உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. சிறிய விமானம் போன்ற அளவுடைய 2024 XY5 விண்கல், நாளை அதிகாலை 5.56 மணிக்கும், ஒரு வீட்டைப் போல் அளவுடைய 2024 XB6 விண்கல், நாளை காலை 7.25 மணிக்கும் பூமியை நெருங்கும் என தெரிவித்துள்ளது. இவற்றின் அளவு, வேகம் அச்சுறுத்தலை ஏற்படுத்தினாலும், எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என நாசா கூறியுள்ளது.

Similar News

News March 21, 2026

LJK இணைந்ததால் கூட்டணிக்கு பலம்: ரங்கசாமி

image

ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் LJK-வை NDA கூட்டணியில் இணைப்பதற்கு புதுச்சேரி CM ரங்கசாமி மறுத்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், அவரே NDA கூட்டணியில் LJK இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். LJK இணைந்தால் கூட்டணிக்கு பலம் என்று மோடி, அமித்ஷா கூறியதாகவும் அவர் தெரிவித்தார். இதன்படி, இக்கூட்டணியில் NR காங்., – 16, பாஜக – 10, அதிமுக, LJK கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

News March 21, 2026

₹18 கோடிக்கு ஏலம் போன ட்விட்டர் பதிவு!

image

மார்ச் 21, 2006. சாதாரணமாக ஜாக் என்பவர் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டார். ‘just setting up my twttr’ என அதிகாலை 2:20 மணிக்கு அவர் பதிவிட்டதுதான் உலகின் முதல் ட்விட்டர் பதிவாகும். இன்று X-ஆகியிருக்கும் ட்விட்டரின் Co-founder ஜாக். வரலாற்று சிறப்புமிக்க அவரின் இந்த பதிவு 2021-ம் ஆண்டு ₹18 கோடிக்கு ஏலம் போனது. அப்பணம் தொண்டு பணிக்காக அளிக்கப்பட்டது. நீங்க ட்விட்டரில் முதலில் என்ன பதிவிட்டீங்க?

News March 21, 2026

தொகுதிப் பட்டியலை வழங்கும் காங்கிரஸ்

image

சட்டப்பேரவை தேர்தலில் காங்., போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேசப் பட்டியலை திமுகவிடம் இன்று வழங்க இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஏற்கெனவே வெற்றிபெற்ற தொகுதிகளையும், மதுரை வடக்கு உள்ளிட்ட புதிய தொகுதிகளையும் கேட்டுப்பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை ஒதுக்க திமுகவிடம் காங்கிரஸ் வலியுறுத்தும் என தெரிகிறது.

error: Content is protected !!