News September 3, 2025
2 லட்சம் பரிசு: நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

சேலம் வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அளவில் தேர்வாகும் 3 விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு நம்மாழ்வார் விருது வழங்கவுள்ளது. விருதுடன் ரூபாய் 2 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. விருதுக்கு தகுதியான விவசாயிகள், அக்ரிஸ்நெட் இணையதளத்தில் வரும் செப்.15- க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 3, 2025
சேலம் : இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

சேலம் மாநகராட்சியில் 3.09.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
News September 3, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.03) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News September 3, 2025
சேலம்: பொதுமக்கள் மனுக்கள் மீது விரைவு விசாரணை!

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்த மனு மீதான விசாரணை நடத்தினார். இந்த முகாமில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.