News May 12, 2024

+2 முடித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் +2 முடித்த மாணவ / மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியில் 13.05.2024 காலை நடைபெறுகிறது. இதில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர் கல்வியில் சேர வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News September 13, 2025

ராமநாதபுரம்: வீணாகிய ரூ.57 கோடி திட்டம்

image

ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் தினமும் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுகின்றனர். தீர்த்தம் அருகே விடுதிகளிலிருந்து கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. இதை விர்க்க 2021ல் பாதாள சாக்கடை திட்டம் அமைத்து 2 மாதங்களுக்கு முன்பயன்பாட்டிற்கு வந்தது.ஆனால் நேற்று மீண்டும்அக்னி தீர்த்த கடலில் திடக்கழிவு நீர் கலந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் ரூ. 57 கோடியில் அமைத்த பாதாள சாக்கடை திட்டம் வீணாகியது.

News September 13, 2025

செப்டம்பர் 15 – முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

image

செப்டம்பர் 15ஆம் தேதி முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா மாவட்ட முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திமுக மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம் அனைத்து பேரூர் ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைவரையும் அண்ணா திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற உறுதிமொழியை அனைவரும் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

News September 13, 2025

ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

image

ராமேஸ்வரத்தில் ஆடி புரட்டாசி மற்றும் தை அமாவாசை உள்ளிட்ட தினங்களில் உள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்த வருகின்றனர். எனவே, செப்டம்பர் 21ஆம் தேதி மகாளய அமாவாசை கொண்டாடப்பட இருப்பதால் ரயில் பயணிகள் சங்கம் சார்பாக மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இரு மார்க்கமாக சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!