News August 24, 2025

2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை அவசியம்!

image

சேலம் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; விவசாயிகள் விதையின் முளைப்புத்திறன், ஈரப்பதம் அறிந்து கொள்ள 2 மாதங்களுக்கு ஒருமுறை விதை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகளின் படி, சில பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ளலாம். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் விதைப் பரிசோதனை நிலையத்தில் ரூ.80 கட்டணத்துடன் விதை பரிசோதனை செய்யலாம்.

Similar News

News August 24, 2025

விவசயிகளே ரூ.9,600 மானியம் வேண்டுமா? இதை செய்யுங்கள்!

image

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வேளாண் உதவி இயக்குநர் மணிவாசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மகுடஞ்சாவடி வட்டாரத்தில் தனிப்பட்ட பட்டாதாரர் 2 ஆண்டுகளுக்கு மேலாக பயிரிடாமல் தரிசாக வைத்துள்ள விவசாய நிலங்களை மீண்டும் விளை நிலங்களாக மாற்ற விண்ணப்பிக்கலாம். தர் நீக்கி சமன் செய்து உழுது பயிர் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.9,600 மானியம் வழங்கப்படுகிறது. விவரங்களுக்கு மகுடஞ்சாவடி வேளாண் துறை அலுவலகத்தை அணுகலாம்.

News August 24, 2025

சேலம்: சிலிண்டர் டெலிவரிக்கு அதிக பணம் கொடுக்கணுமா?

image

சேலம் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>https://pgportal.gov.in<<>>/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்கள். இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News August 24, 2025

சேலத்தில் பச்சிளம் பெண் குழந்தை விற்பனை!

image

சேலம் வீரபாண்டி, ரெட்டிப்பட்டியை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்-சிவகாமி தம்பதியினருக்கு கடந்த 9 நாள்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை தேவராஜ் என்ற புரோக்கர் மூலமாக, ரஞ்சித் என்பவருக்கு ரூ.1.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!