News November 9, 2025
2 பேரை தூக்கில் போட்ட சவுதி அரேபியா

வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 2 குடிமக்களை சவுதி அரேபிய அரசு தூக்கிலிட்டுள்ளது. இருவரும் ஒரு பயங்கரவாத குழுவில் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள், பாதுகாப்பு தளங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக சவுதி அரசின் உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
சிசேரியன் காயம் வேகமாக ஆற TIPS!

கர்ப்ப காலத்தில் எப்படி உடல்நலத்தை பேணி காத்தீர்களோ அதைவிட கவனமாக குழந்தை பிறந்த பின் பார்த்துக்கொள்ள வேண்டும் ➤ஆரஞ்சு, நெல்லி, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள் ➤பருப்பு, மீன், சிக்கன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள் ➤சருமம் பழையபடி மாற தேவையான அளவு தண்ணீர் அருந்துவது அவசியம் ➤தினம் ஒரு கீரை, நட்ஸ் வகைகளை எடுத்துக்கொண்டால் சிறப்பு. தாய்மார்களுக்கு SHARE THIS.
News November 9, 2025
டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாறுகிறது

பருவமழை முடியும் வரை டாஸ்மாக் கடைகளை 1 மணி நேரம் முன்னதாக மூட அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது, மதியம் 12 – இரவு 10 மணி வரை கடைகள் திறக்கப்படுகின்றன. மழை நேரத்தில் வீடுகளுக்கு செல்ல சிரமம் ஏற்படுவதால் கடை மூடும் நேரத்தை குறைக்க ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையின் சூழலுக்கேற்ப கடைகளை சீக்கிரம் மூட சில மாவட்ட நிர்வாகங்களும் அறிவுறுத்தியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
News November 9, 2025
11-ம் வகுப்பு மாணவனை சுட்டுத்தள்ளிய சக மாணவர்கள்

ஹரியானாவில் 11-ம் வகுப்பு மாணவர்கள் சகமாணவனை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் சக மாணவனுடன் ஏற்பட்ட தகராறுக்கு பழிதீர்க்க, 2 மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் வீட்டிற்கு சக மாணவனை அழைத்து வந்து, இருவரும் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரத்த வெள்ளத்தில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு போராடி வருகிறார்.


