News November 25, 2025
2 நாள்களில் 644 புள்ளிகள் சரிந்துள்ளது சென்செக்ஸ்

தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச்சந்தை 300 <<18376719>>புள்ளிகளுக்கு மேல்<<>> சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. சென்செக்ஸ் 313 புள்ளிகள் சரிந்து 84,587 புள்ளிகளிலும், நிஃப்டி 74 புள்ளிகள் சரிந்து 25,884 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. HDFC Bank, Adani Enterprises, Infosys உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. நீங்கள் வாங்கிய SHARE உங்களுக்கு லாபம் தந்ததா?
Similar News
News April 7, 2026
பூனம் பாண்டேவின் ஐடியா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக வருவேன் என்பது உள்ளிட்ட பல சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு பிரபலமானவர் பூனம் பாண்டே. இந்நிலையில், சரியோ தவறோ நம்மை பற்றி அனைவரும் பேச வேண்டும், அதற்கேற்ப நாமும் நடந்துகொள்ள வேண்டும் என பூனம் பாண்டே கூறியுள்ளார். இப்படி செய்தால் தான் சினிமாவில் நாம் கவனிக்கப்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவாகவும், எதிர்த்தும் கருத்துகள் பகிரப்படுகின்றன.
News April 7, 2026
குறுக்கு வழியில் எதிரிகளின் கீழ்தரமான செயல்: சுந்தர்.சி

தேர்தலில் வெற்றிபெற்றால் மதுரை மத்திய தொகுதியில் ‘இறைச்சி கடைகளை மூடுவேன்’ என தான் கூறியதாக வெளியாகும் செய்தி முற்றிலும் போலியானது என சுந்தர்.சி தெரிவித்துள்ளார். மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்க தெரிந்தவன் நான் என்பது மக்களுக்கே தெரியும். போட்டியை நேரடியாக எதிர்கொள்ள தைரியமின்றி குறுக்கு வழியை நாடுவோரின் இதுபோன்ற கீழ்தரமான செயல்களுக்கு வெற்றியால் பதிலடி தருவோம் என கூறியுள்ளார்.
News April 7, 2026
தமிழகத்தில் இத்தனை பேர் வேட்பு மனு தாக்கலா?

2026 தேர்தலில் போட்டியிட 7,594 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தினமே வேட்பு மனு பரீசிலனை நடைபெற்று, மாலைக்குள் தள்ளுபடியாகும் வேட்பு மனுக்களின் விவரங்கள் தெரியவரும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஏப்.9 ஆகும். இதன்படி, அன்றைய நாள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். ஏப்.23-ல் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


