News December 28, 2025
2 நாள்களில் முடிந்த ஆஷஸ்.. ₹60 கோடி நஷ்டமா?

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 4-வது டெஸ்ட், 2 நாள்களிலேயே முடிவடைந்தது. இதனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்துக்கு சுமார் ₹60 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது வணிகத்திற்கு மோசமானது மற்றும் ரசிகர்களுக்கும் விளையாட்டுக்கும் நல்லதல்ல என கூறப்படுகிறது. 4-வது டெஸ்டில் 150 ஓவர்கள் கூட வீசப்படவில்லை. 2-வது டெஸ்ட் போட்டியும் 2 நாட்களிலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 30, 2025
BREAKING: மீண்டும் கைது.. பதற்றம் உருவானது

சென்னை கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்தனர். தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் குண்டுகட்டாக கைது செய்த நிலையில், அவர்களில் சிலர் மயக்கமடைந்தனர். முன்னதாக, இன்று காலை அறிவாலயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட <<18711270>>தூய்மை பணியாளர்கள் கைது<<>> செய்யப்பட்டனர்.
News December 30, 2025
BREAKING: தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

தங்கம் விலை இன்று (டிச.30), 22 கேரட் கிராமுக்கு ₹420 குறைந்து ₹12,600-க்கும், சவரனுக்கு ₹3,360 குறைந்து ₹1,00,800-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை, இந்த வாரம் சரிவுடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. மேலும், <<18708753>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
News December 30, 2025
மதிமுக MLA-வுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை!

காசோலை மோசடி வழக்கில் வாசுதேவநல்லூர் மதிமுக MLA சதன் திருமலைக் குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீட்டிற்காக 2 மாதங்களுக்கு தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராயப்பேட்டை தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற ₹1 கோடி கடனை அடைப்பதற்காக அவர் அளித்த காசோலை பவுன்ஸ் ஆனதாக 2019-ல் வழக்கு தொடரப்பட்டிருந்தது.


