News November 16, 2025
2 ஆண்டுகளில் 12 நாடுகளில் Gen Z போராட்டம்!

1997-2012-க்கு இடையில் பிறந்த தலைமுறையே Gen Z. கடந்த 2 ஆண்டுகளில் நேபாளம், வங்கதேசம், மடகாஸ்கர், கென்யா, பெரு, மொராக்கோ, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை, பராகுவே, மாலத்தீவு, மெக்சிகோ என 12 நாடுகளில் Gen Z நடத்திய போராட்டங்களில் சில ஆட்சியையே கவிழ்த்துள்ளன. ஊழல், வேலையின்மை போன்ற காரணங்களுக்காக போராடும் இவர்கள், உலகளவில் மாற்றத்தை கொண்டு வரும் சக்தியாக வளர்ந்து வருகின்றனர்.
Similar News
News November 16, 2025
சற்றுமுன்: பாஜகவில் இருந்து விலகினார்

பாஜகவில் இருந்து <<18296121>>இடைநீக்கம்<<>> செய்யப்பட்ட Ex மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங், கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதானி நிறுவனத்துடன் பிஹார் அரசு மேற்கொண்ட மின்சார ஒப்பந்தத்தில் ₹62,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட அவர், தவறுகளை சுட்டிக் காட்டினால் கட்சிக்கு விரோதமா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 16, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி.. முடிவு இதுதான்!

NDA கூட்டணியில் தவெகவை இணைக்க EPS காய் நகர்த்தி வருகிறார். ஆனால், அக்கூட்டணியில் தவெக இணையாது என நிர்மல்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜக தங்களது கொள்கை எதிரி என்பதால், அவர்களோடு இருக்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க 0.1% கூட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தங்களது CM வேட்பாளர் விஜய்தான் எனவும், கொள்கை முரண்பாடு இல்லாத கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்றும் அவர் பேசியுள்ளார்.
News November 16, 2025
இதெல்லாம் இந்திய பிராண்ட் இல்லையா? என்ன சொல்றீங்க!

நாம் காலம் காலமாக பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், இந்தியாவைச் சேர்ந்தது அல்ல என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், நாம் இந்திய பிராண்டுகள் என்று பரவலாக நினைக்கும் பல பிராண்டுகள், உண்மையில் வெளிநாடுகளுக்கு சொந்தமானவை. அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


