News April 12, 2024

2 ஆண்டுகளில் ரூ. 650 கோடி

image

திருவண்ணாமலை தொகுதி தி.மு.க வேட்பாளர் சி.என். அண்ணாதுரையை ஆதரித்து தி.மு.க வினர் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தனர். அப்போது பேசிய மு.பெ. கிரி எம்.எல்.ஏ அனைத்து துறைகளின் மூலம் சாலைகள், தடுப்பணைகள், அரசு மருத்துவமனைகள் என ஏராளமான வளர்ச்சிப்பணிகள் சுமார் ரூ.650 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றால் சாலை அமைப்போம் என அதிமுக பொய் பிரச்சாரம் செய்கிறது என்றார்.

Similar News

News February 5, 2026

தி.மலை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

தி.மலை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். ஷேர் பண்ணுங்க.

News February 5, 2026

தி.மலையில் பயங்கர தகராறு!

image

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் ஊராட்சி, வி.வி தாங்கல் கிராமத்தில் வசிப்பவர் அரவிந்தராஜ்(37). இவரின் குடும்பத்திற்கு, அருகே வசிக்கும் விநாயகம்(32) என்பவரின் குடும்பத்திற்கும் இடையே வழிப்பாதை தொடர்பாக பயங்கர தகராறு ஏற்பட்டது. இதுகுறித்த போலீஸ் புகாரில், விநாயகம், ஏழுமலை, அரவிந்தராஜ், தமிழ்வாணன், தீபன் என்ற பார்த்தீபன்(22), அருண் குமார்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News February 5, 2026

தி.மலை: சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

image

சென்னையில் நேற்று EPS 2ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இதனையடுத்து, வந்தவாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெண்குன்றம், தென்னாங்கூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், அதிமுக சார்பில் வாக்குறுதிகளை விளக்கும் சுவரொட்டிகள் ஆங்காங்கே ஒட்டப்பட்டன. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும், முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!