News November 13, 2025
2-வது சிம்பொனியை அரங்கேற்றும் இளையராஜா

‘ராஜாவுக்கெல்லாம் ராஜா இந்த இளையராஜா’ என்று ரசிகர்கள், தலைமுறை தாண்டியும் உருகி வருகின்றனர். இதனிடையே, தனது முதல் சிம்பொனியை, லண்டனில் உள்ள Eventim Apollo Theatre-ல் இளையராஜா அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், ஒட்டுமொத்த இசை உலகையே தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்தார். இந்நிலையில், தனது 2-வது சிம்பொனியை நவ.17-ல் ஹங்கேரியில் உள்ள Eötvös Loránd University-ல் அரங்கேற்றம் செய்யவுள்ளார்.
Similar News
News April 5, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்.7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் அம்மாநில கல்வித்துறை விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தது. தற்போது கூடுதல் அறிவிப்பாக நாளை(ஏப்.6) மேலும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த வாரம் முழுவதும் பள்ளிகள் இயங்காது. இந்த விடுமுறையை யூஸ் பண்ணி இறுதித் தேர்வுக்கு சிறப்பாக தயாராகுங்கள் மாணவர்களே..!
News April 5, 2026
RCB உடனான மோசமான சாதனையை தகர்க்குமா CSK?

5 முறை டைட்டில் வின்னர் என்ற பெருமையை கொண்ட CSK, நடப்பு சீசனில் முதல் வெற்றியை பறித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம், RCB உடனான 3 முந்தைய போட்டிகளில் CSK தோல்வியுற்ற நிலையில், இன்று மீண்டும் மோதுகிறது. எனவே, இந்த மோசமான சாதனையை சென்னை அணி தகர்த்தே ஆக வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?
News April 5, 2026
எழுந்தே நடக்க முடியாதவர் MLA? இபிஎஸ்

துரைமுருகனுக்கு 87 வயதாகும் நிலையிலும், காட்பாடி தொகுதியின் திமுக வேட்பாளராக 13-வது முறையாக களம் காண்கிறார். இந்நிலையில், அவரை EPS விமர்சித்துள்ளார். ஒரு MLA என்றால் தொகுதி முழுவதும் சுற்றிச்சுழன்று மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். ஆனால் துரைமுருகனால் அது முடியுமா?; அவரால் எழுந்து நடக்கவே முடியாத சூழலில் எப்படி ஒரு MLA-வாக சிறப்பாக செயல்பட முடியும் என சாடினார். <<-se>>#TNElection2026<<>>


