News April 2, 2025
2-வது இடம்பிடித்த சேலம்!

சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. 2024 2025 ஆம் நிதி ஆண்டில் கடந்த 31ஆம் தேதி வரை, சேலம் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் ரூ.165 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் 48 சதவீதம் சொத்து வரி வசூல் ஆகியுள்ளது. இதனால் வரி வசூலில் சேலம் மாநகராட்சி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். SHARE IT!
Similar News
News April 4, 2025
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் வரலாறு

தென்னிந்நிய சினிமா வளர்ந்தது கோடம்பாக்கம் என்றாலும், அதனின் தொடக்கம் சேலம் தான். ஆம், சேலத்தை மையமாகக் கொண்ட ’மாடர்ன் தியேட்டர்ஸ்’ நிறுவனத்தில் இந்தி, சிங்களம் உட்பட பல மொழிகளில் 150 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. மலையாள சினிமாவின் முதல் பேசும் படத்தை தயாரித்த பெருமையும் இந்நிறுவனத்தையே சாரும். ஏற்காடு சாலையில் உள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்ச் தான் இந்திய சினிமா பரிணாமத்தின் நுழைவு வாயில்.
News April 4, 2025
டிக்கெட் இன்றி பயணம்: ரூ.22.14 கோடி அபராதம் வசூல்!

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 3.30 லட்சம் பயணிகளிடம் இருந்து ரூ.22.14 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் 16% அதிகம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் முறையாக டிக்கெட் எடுத்து உரிய வகுப்பில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
News April 4, 2025
சேலம் மாணவி மரணம்: அரசுக்கு இபிஎஸ் கேள்வி!

“நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது;நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் திமுக, தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?” என அதிமுக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி