News August 16, 2024
2 டன் இரும்பு பொருட்கள் திருடிய 4 பேர் கைது

நாங்குநேரி பகுதியில் ரயில்வே இருப்பு பாதை பணிக்காக வைத்திருந்த 2 டன் தளவாட இரும்பு பொருட்களை திருடிய நாங்குநேரி பகுதியை பகுதியைச் மாரிதாஸ், அஜித், திருநெல்வேலியை சேர்ந்த இருதயராஜ், மற்றும் இரும்பு பொருட்களை வாங்கிய செந்தில்குமார் ஆகிய நான்கு பேரை நாகர்கோவில் ரயில்வே போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த பொருட்கள் மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 18, 2025
குமரியில் ரைட்டர், ஏட்டு மீது நடவடிக்கை

கட்டசல் பகுதியில் உள்ள கல்குவாரி அனுமதி இல்லாமல் ரகசியமாக செயல்பட்டு வந்துள்ளது. இது குறித்து எஸ்பி ஸ்டாலினுக்கு புகார்கள் சென்ற நிலையில் நள்ளிரவில் குவாரியில் அதிரடி ஆய்வு நடைபெற்றது. அதில் விதிமீறல் நடந்துள்ளது தெரியவந்த நிலையில் குவாரி மேலாளரான ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். மேலும் குவாரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்ட ரைட்டர், ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
News December 18, 2025
குமரியில் புகார் அளிக்க எண் வெளியீடு

குமரி மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News December 18, 2025
குமரியில் 200 கிலோ கஞ்சா பறிமுதல்!

குமரி மாவட்டத்தில் ரயில் மூலம் சில தினங்களாக கஞ்சா தொடர்ச்சியாக கடத்தி வரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெளி மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் இதுவரையிலும் ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் இன்று (டிச.18) தகவல் தெரிவித்துள்ளனர்.


