News January 2, 2025
2 ஆண்டுகளில் 868 கஞ்சா வியாபாரிகள் கைது

தேனி மாவட்ட போதைப் பொருட்கள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் 2023ஆம் ஆண்டு 166 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 335 பேர். இதேபோல் 2024-ல் 233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 533 பேர் என கடந்த 2 ஆண்டுகளில் 399 வழக்குகளில் 868 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 82 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News November 22, 2025
தேனி: கார் மோதி பைக்கில் சென்ற தம்பதி படுகாயம்

போடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (49). இவர் நேற்று முன்தினம் அவரது மனைவி கலைச்செல்வி என்பவருடன் தேவாரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது இவர்களுக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் தம்பதியர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு (நவ.21) பதிவு செய்துள்ளனர்.
News November 22, 2025
தேனி: போன் தொலைந்து விட்டதா..கவலைய விடுங்க..!

தேனி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<
News November 22, 2025
தேனி: பைக் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு.!

போடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (30) மின் ஊழியரான இவர், நேற்று (நவ.21) இரவு அவரது பைக்கில் தேனி – போடி சாலையில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் சாலையின் குறுக்கே சென்றதால், திடீரென பிரேக் போட்டதில் விபத்து ஏற்பட்டு ரஞ்சித் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


