News March 21, 2024
2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக சிவசாமி வேலுமணி அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Similar News
News November 3, 2025
தூத்துக்குடியில் ரூ.11 கோடியில் சுற்றுலா மாளிகை

தூத்துக்குடி வளர்ந்து வரும் தொழில் நகரமாக மாறி வருவதால் கூடுதலாக அரசு சுற்றுலா மாளிகை ஒன்று கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி விமான நிலையம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் ரூ.11 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மாளிகை கட்ட பொதுப்பணித்துறை திட்ட மதிப்பீடு தயார் செய்துள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 3, 2025
தூத்துக்குடியில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தூத்துக்குடி நகர்ப்புற துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(நவ.4.) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் போல்பேட்டை, 1, 2-ம் கேட், மட்டக்கடை, வடக்குபீச் ரோடு, எட்டயபுரம் ரோடு, சிவன் கோவில் தெரு,மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, , ஸ்டேட் வங்கி காலனி, அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, , பிரையண்ட்நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர் பகுதியில் மின்சாரம் இருக்காது.
News November 3, 2025
தூத்துக்குடி பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விடுத்துள்ள விழிப்புணர்வு எச்சரிக்கையில் கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக உங்களை தொடர்பு கொள்வார்கள். அவ்வாறு தொடர்பு கொள்பவர்கள் முன்பணம் வேண்டும் அதற்கு உங்கள் க்யூ ஆர் கோர்டு அனுப்பி பணம் கேட்பார்கள். எனவே இத்தகைய மோசடி அலைபேசி அழைப்புகளை நம்பி பெற்றோர்கள் ஏமாற வேண்டாம் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. SHARE!


