News March 21, 2024
2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நீலகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக லோகேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Similar News
News September 19, 2025
நீலகிரியில் வரும் 28ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வு ஆனது வருகின்ற 28ஆம் தேதி நடைபெற உள்ளது. குன்னூரில் சிம்ஸ் பார்க் அருகில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி ஒரு தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு நடைபெறும் நாள் அன்று காலை 8:30 – 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குச் செல்ல டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.
News September 19, 2025
நீலகிரி: ஆட்கொல்லி யானைக்கு ரேடியோ காலர் பொருத்த தயார்

கூடலூர் ஓவேலி வனப்பகுதியில், மனித-யானை மோதலை ஏற்படுத்தி வரும் யானையைப் பிடிக்க, சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 60-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், நான்கு கும்கி யானைகள் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் யானையைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிடிக்கப்படும் யானைக்கு பொருத்துவதற்காக ரேடியோ காலரும் தயார் நிலையில் உள்ளது.
News September 19, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய ஆறு உட்கோட்டங்களிலும் இன்று (18.09.2025) இரவு ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் குறித்து நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால், நீங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம்.