News April 19, 2024
2ஆவது முறையாக இயந்திரம் கோளாறு

ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விண்ணமங்கலம் 74வது மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு அரை மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு, வாக்கு பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் வாக்காளர்கள் திரும்பி செல்லும் அவல நிலை ஏற்பட்டது.
Similar News
News February 12, 2026
FLASH: திருப்பத்தூரில் தடை!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுகவின், வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு முகவர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள வருகிறார். இந்த நிலையில், அதற்காக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதி ட்ரோன் கேமிராக்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 12, 2026
திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<
News February 12, 2026
BIG NEWS: திருப்பத்தூரில் தினம் தினம் அரங்கேறும் கொடூரம்!

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் எருது விடும் விழா பிரபலம். எருதை வேகமாக ஓட வைக்க வேண்டும் என மனித தன்மையை இழந்து, எருதின் ஆசன வாயு பகுதி மற்றும் வால் பகுதியில் கிளிப் மாட்டி கொடுமை படுத்தும் அவலம் தினம் தினம் அரங்கேறி வருகிறது. ஒருபடி மேலே போய் இது போன்ற விழாவை துவக்கிவைக்கும் MLA-க்கள் கண்முன்னே எருதுகள் இவ்வாறு ஓடுகிறது. ஆனால் ஒரு MLAகூட இதற்கு எதிராக மூச்சுகூட விடவில்லை.


