News July 24, 2024

2ஆம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று தொடக்கம்

image

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து ஜூலை 10 முதல் 19ஆம் தேதி வரை 8 நாட்கள், நாடாளுமன்ற தொகுதி வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதற்கட்ட ஆலோசனையை நடத்தினார். இந்நிலையில், இன்று முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 2ஆம் கட்ட ஆலோசனை நடத்துகிறார். இன்றைய கூட்டத்தில் காலை 10 மணிக்கு தேனி மாவட்ட நிர்வாகிகளும், மாலை 4 மணிக்கு ஆரணி மக்களவைத் தொகுதி நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.

Similar News

News March 9, 2026

சென்னை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு <>pmjay.gov.in <<>>இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News March 9, 2026

வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை மீண்டும் தள்ளிவைப்பு!

image

பரங்கிமலை – வேளச்சேரி இடையிலான ரயில் சேவை நாளை முதல் தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தண்டவாளத்தில் சில சிறிய அளவிலான சிவில் & எலக்ட்ரிக்கல் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என ஆய்வுக்குழு அறிவுறுத்தியுள்ளது. இதனால் நாளை தொடங்க வேண்டிய சேவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை தள்ளிப்போயிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

News March 9, 2026

சென்னை பீச்சில் திருமணம் – அரசின் சூப்பர் திட்டம்!

image

சென்னையில் பிரபலங்களும் தொழிலதிபர்களும் பீச்களில் திருமணத்தை நடத்துவதும், அது வைரலாவதும் வழக்கம். ஆனால், நடுத்தர சாமானியர்களுக்கு இது எப்போதும் எட்டாக்கனிதான். இதற்காக தமிழ்நாடு அரசு “பீச் வெட்டிங்” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.10,000 மட்டும் செலுத்தி TTDC-ன் மூலம் திருமணங்களை பீச்சுக்களில் நடத்தி கொள்ளலாம். இங்கு <>க்ளிக் <<>>செய்து, நீங்கள் புக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!