News March 21, 2024
2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நெல்லை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக, அண்மையில் அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். எம்பி தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இபிஎஸ் இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார். நெல்லைக்கு அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழன் 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News July 11, 2025
புனிதப் பயணம் மேற்கொள்ள நிதி உதவி மக்களுக்கு அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் புத்த மதத்தினர், சமண மதத்தினர் மற்றும் சீக்கிய மதத்தினர் புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வரும் நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார்.
News July 11, 2025
நெல்லை:பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

நெல்லை மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வரும் 12ம் தேதி அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம். இதற்கான உரிய ஆவணங்களை மக்கள் கொண்டு சென்று பயன்பெறலாம் என ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
News July 11, 2025
பாதிரியாரிடம் பணம், செல்போன் பறித்த கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் அருள் சீலன், தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓரினச் சேர்க்கையாளர் கும்பலால் தாக்கப்பட்டு, அவரிடமிருந்து ஒரு லட்ச ரூபாய், செல்போன், ஏடிஎம் கார்டுகள் பறிக்கப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில், கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.