News March 21, 2024
2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக பசிலியா நசரேத் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Similar News
News December 11, 2025
குமரி: பைக் மோதி மூதாட்டி பலி

ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் ஞானம்மாள் (70). இவர் ராமன் புதூர் மீன் சந்தையில் மீன் வாங்கிவிட்டு பஸ் ஏறுவதற்காக ரோட்டை கடக்கும் போது அந்த வழியாக சென்ற பைக் அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த ஞானம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் நேற்று (டிச.10) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 11, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் – ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் கடையால், அருமனை பேரூராட்சிகள் மற்றும் வெள்ளாங்கோடு, மாங்கோடு, மஞ்சாலுமூடு உள்ளிட்ட ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் களியல் செயின்ட் மேரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் டிச.13 (சனிக்கிழமை) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தகவல் தெரிவித்துள்ளார்.
News December 11, 2025
குமரில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

தேனி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


