News March 21, 2024
2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக பசுபதி அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Similar News
News December 19, 2025
வேலூர்: DEGREE போதும் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்த, 18 முதல் 28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News December 19, 2025
வேலூர் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கம் பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியலை இன்று டிசம்பர் 19 பிற்பகல் 3 மணி அளவில் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவர் மாண சுப்புலட்சுமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட உள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
வேலூர்: மாணவிகளிடம் அத்துமீறிய டிரைவர்!

காட்பாடியை சேர்ந்த 11 வயது சிறுமி வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். மாணவி தினமும் பள்ளி பேருந்தில் செல்லும் போது, டிரைவர் தேவேந்திரன் (61) மாணவி மற்றும் அவரின் அருகில் இருக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கில் தேவேந்திரனை வேலூர் மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.


