News March 21, 2024

2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

திருவண்ணாமலை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக கலியபெருமாள் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று(மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

Similar News

News November 14, 2025

தி.மலையில் தீவிர சோதனை!

image

தி.மலையில் டிச.3ஆம் தேதி மகாதீபத் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் போலீசார் இன்று (நவ.14) தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் வளாகம், ராஜகோபுரம், அம்மன் தேர் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் ஆய்வு நடைபெற்று வருகிறது.

News November 14, 2025

தி.மலை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

தி.மலை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதியிலல் வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. <>இங்கு கிளிக்<<>> செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 14, 2025

தி.மலை: கலெக்டர் ஆபீசில் தீக்குளித்தவர் பலி!

image

தி.மலை, கலசப்பாக்கம் அடுத்த கீழ்தாமரைப்பாக்கத்தில் குமார் என்பவருக்கும் அவரது சகோதரருக்கும் நிலப்பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் குமாரும் அவரது மனைவி பூங்கொடியும் தீக்குளித்தனர். 45 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பூங்கொடி, சிகிச்சை பலனின்றி நேற்று (நவ.13) உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!