News March 21, 2024
2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருப்பூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக அருணாசலம் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.
Similar News
News September 15, 2025
அமைச்சர் தலைமையில் நகராட்சி அலுவலகம் திறப்பு விழா

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுக்காவில் புதிய நகராட்சி அலுவலக கட்டிடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், காங்கயம் நகர் மன்ற தலைவர் சூர்ய பிரகாஷ், நகராட்சி ஆணையர் பால்ராஜ், காங்கயம் திமுக நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News September 15, 2025
திருப்பூரில் இப்படியொரு அதிசய கோயிலா?

திருப்பூர், பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில், பழமைவாய்ந்த வலுப்பூர் அம்மன் கோயில் உள்ளது. இங்கு சர்வ நோய்களை தீர்க்கும் சக்திவாய்ந்த பத்ரகாளியம்மன் குடிகொண்டிருக்கிறாள். மன்னர் விக்ரமாத்த சோழனின் மகளுக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், அம்மனை வணங்கியதால் குணமானது. இதனால் வலுப்பூர் அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். நோய் பாதிப்பு உள்ளவர்கள், அம்மனை சென்று வழிபட்டு வந்தால், நிச்சயம் நோய் குணமாகுமாம்.
News September 15, 2025
மாவட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் தையல் இயந்திரம் மற்றும் தலா ரூ.5 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் 4 பயனாளிக்களுக்கு ரூ.26 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் சலவைப்பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.