News October 26, 2024

199 மனுக்களை பெற்ற சென்னை காவல் ஆணையர்

image

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில், சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 199 மனுக்களை பெற்றார். இதில் பணி மாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதிய குறைபாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News January 27, 2026

சென்னை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

சென்னை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 27, 2026

BREAKING: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு

image

சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானநிலையத்தில் செயல்படும் கேண்டீன் ஒன்றில் புகை எழுந்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

News January 27, 2026

பராமரிப்பு பணி: 5 ரயில்கள் முழுமையாக ரத்து

image

சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – கூடூர் இடையிலான தாடா மற்றும் சூலூர்பேட்டை ரயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் இன்று (27ம் தேதி) அதிகாலை 12.50 மணி முதல் காலை 8.50 மணி வரை நடைபெறுகிறது. இதன்காரமாக, 5 மெமு ரயில்கள் முழுமையாகவும், 4 ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!