News March 17, 2024
1966 வாக்குச்சாவடிகள் அமைப்பு – ஆட்சியர்

விழுப்புரம் மாவட்டத்தில் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக மொத்தம் 1966 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்காக 12095 அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 113 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாகவும், மொத்தம் 16,69,577 வாக்காளர்கள் உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
FLASH: கோவையை தொடர்ந்து விழுப்புரத்தில் கொடூரம்

திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் இளங்கோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்கு தெரியாமல் ஆண் நண்பருடன் சென்னைக்கு சென்ற மாணவி, கடந்த 7ஆம் தேதி வீடு திரும்பி உள்ளார். அப்போது காவல் நிலையம் அழைத்து செல்வதாக கூறி பாழடைந்த வீட்டிற்கு சென்று அத்துமீறி உள்ளார். இதுகுறித்த உங்கள் கருத்துகளை கமெண்டில் ஷேர் பண்ணுங்க
News November 8, 2025
ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று (நவ.8) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வன்னியர்களுக்கு இடைக்கால தீர்வாக 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்த கோரி அறவழியில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். வருகின்ற (டிச) 12-12-2025 அன்று தமிழக அரசின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் எதிரே அற வழியில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிதுள்ளார்.
News November 8, 2025
விழுப்புரம் பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள்<


