News March 25, 2024

1950 -ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்

image

18 ஆவது நாடாளுமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மூன்று மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து புகார்கள், சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு பொதுமக்கள் 1950 வை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும்,
மாநகராட்சி உதவி எண் 1913 யையும் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News April 15, 2025

தொழில் பிரச்னைகளை தீர்க்கும் நிமிஷாம்பாள்

image

சென்னை சௌகார்பேட்டை காசி செட்டி தெருவில், பலருக்கும் தெரியாத அன்னை நிமிஷாம்பாள் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் நிமிஷாம்பாளுக்கு இங்கு மட்டும் தான் கோவில் உள்ளது. இங்கு சென்று வழிப்பட்டால் தொழில் சார்ந்த பிரச்னைகள் நீங்கி, நஷ்டத்திலிருந்து மீண்டு வியாபாரம் லாபகரமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொழில், வியாபாரத்தில் சிரமப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News April 15, 2025

பைக் விபத்து: சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

image

சென்னை சாலிகிராமத்தில் கடந்த 11ஆம் தேதி அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 16 வயது சிறுவன், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தாயார் ஜாமினில் விடுவிப்பு. விபத்தில் படுகாயம் அடைந்த 76 வயது முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 15, 2025

மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!