News August 14, 2024
1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில் இணையதளங்களின் வாயிலாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை முன்பாகவே கண்டறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், வங்கி அதிகாரி போன்று தொலைபேசியில் அழைத்து வங்கி கணக்கு விவரங்களை கேட்டால் ஒரு போதும் பகிரக்கூடாது என காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
Similar News
News September 18, 2025
திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், ஸ்டேசன் வீதி, வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோநகர், காமாட்சிபுரம், சாமுண்டிபுரம், கல்லம்பாளையம், பத்மாவதிபுரம், அண்ணாகாலனி, அங்கேரிபாளையம் ரோடு, கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News September 18, 2025
திருப்பூர்: தலைமறைவு குற்றவாளி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டாக்டர் நகர் பகுதியில் கார் திருடப்பட்ட வழக்கில் கடந்த ஏழு ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்தனர். தர்மபுரி பகுதியைச் சேர்ந்த ராமன் என்ற சப்பாத்தி ராமன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.
News September 17, 2025
மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 17.09.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம்,உடுமலை, அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்