News March 28, 2025

193 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தையொட்டி நாகை மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நாளை (மார்ச்29) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், நீரின் முக்கியத்துவம், 2025-26ம் ஆண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியம் நிதி பணிகள் தேர்வு பட்டியல் ஒப்புதல், முதலமைச்சரின் பழுதுற்றவீடுகள் மறுகட்டுமான திட்டம் குறித்து விவாதிக்கப்படும். ஆகவே இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 12, 2025

நாகை அங்கன்வாடி மையத்தில் காலி பணியிடங்கள்

image

நாகை மாவட்டத்தில் 20 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் காலி பணியிடங்களாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் வருகிற 7ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை உடனே வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 12, 2025

மீன்பிடி தடைக்காலம் ஆட்சியர் அறிவிப்பு

image

நாகையில் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மீன்பிடி தடைக்காலத்திற்கு முன் கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் ஏப்.14 இரவு 12 மணிக்குள் திரும்ப வேண்டுமென நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்த தகவலை உங்க மீனவ நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News April 11, 2025

வணிகர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும். மே மாதம் 15ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!