News April 10, 2024
எஸ்ஐபி திட்டங்களில் குவிந்த ரூ.19,270 கோடி

எஸ்ஐபி (SIP) முதலீட்டு திட்டங்களில் கடந்த மார்ச்சில் மட்டும் இந்தியர்கள் ரூ.19,270 கோடியை முதலீடு செய்துள்ளனர். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிறிது சிறிதாக முதலீடு செய்யும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய மார்ச்சில் 42 லட்சத்து 87 ஆயிரத்து 117 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எஸ்ஐபி திட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் சராசரி சொத்துக்களின் மதிப்பு ரூ.10,71,665.63 கோடியாக அதிகரித்துள்ளது.
Similar News
News August 11, 2025
கர்நாடக அமைச்சர் KN ராஜண்ணா ராஜினாமா!

கர்நாடகாவின் கூட்டுறவுத் துறை அமைச்சர் KN ராஜண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் ‘ஓட்டு திருட்டு’ மூலமே BJP மீண்டும் ஆட்சிக்கு வந்ததாகக் கூறிய ராகுல் காந்தி BJP மற்றும் ECI-க்கு எதிரான தனது போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியிலும் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாக KN ராஜண்ணா பேசியது சர்ச்சையான நிலையில் பதவி விலகியுள்ளார்.
News August 11, 2025
ராகுல், கனிமொழி உள்ளிட்டோர் கைதுக்கு விஜய் கண்டனம்

டெல்லியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு எதிராகப் <<17368703>>போராடிய எதிர்க்கட்சி MP-க்கள் <<>>கைதுக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் ஆணிவேரான தேர்தலை நியாயமாகவும், அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாகவும் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி MP-க்கள் கைதுக்கு எதிராக தமிழகத்தில் இருந்து முதல் நபராக விஜய் குரல் கொடுத்துள்ளார். இது பற்றி உங்கள் கருத்து?
News August 11, 2025
தலைநகருக்கு டெஸ்லா வந்துருச்சு…

டெஸ்லா தனது 2-வது ஷோரூமை டெல்லி ஏரோசிட்டியில் திறந்துள்ளது. 8,200 சதுரடியில் திறக்கப்பட்ட இதன் மாத வாகை 17 லட்சமாம். கடந்த ஜூலை 15-ம் தேதி மும்பையில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் திறக்கப்பட்டது. ஒரே மாதத்தில் தனது 2-வது கிளையை திறந்துள்ள டெஸ்லா இந்தியாவின் வாகன சந்தையை கைப்பற்றும் நோக்கில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இந்தியாவில் ‘Y’ மாடலில் 2 வெர்ஷன்களை டெஸ்லா அறிமுகப்படுத்தியுள்ளது.