News October 27, 2024
தவெக மாநாட்டில் 19 தீர்மானங்கள்

விஜய்யின் தவெக மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தி திணிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, மின் கட்டணம், சட்டம் ஒழுங்கு பிரச்னை, மகளிர் பாதுகாப்பு, தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம், மகளிர் – குழந்தைகள் பாதுகாப்புக்கு தனிச் சட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.
Similar News
News January 19, 2026
அமெரிக்க வரி உயர்வால் கோவையில் பாதிப்பு

அமெரிக்காவில் இந்தியா சார்ந்த பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டதால், குறிப்பாக ஜவுளி துறையில் கோவையும் திருப்பூரும் பெரும் பாதிப்புகளை சந்திக்கின்றன. மேலும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஜவுளி, வார்ப்படம், மோட்டார் பம்ப் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக ஜவுளி தொழில் துறையினர் கூறுகின்றனர்.
News January 19, 2026
உங்க கார், பைக்குக்கு உரிய ஆவணம் இருக்கா?

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் Vahan தரவுத்தளத்தில் மொத்தம் 40.7 கோடி வாகனங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில், 30 கோடி வாகனங்கள்; அதாவது, 70%-க்கும் அதிகமான வாகனங்கள் புதுப்பிக்கப்பட்ட உரிய ஆவணங்கள் இன்றி இயங்கு வருகின்றன. 2ஆண்டுகள் கடந்தும் விதிகளைப் பின்பற்றாத வாகனங்களின் பதிவு, தரவுத்தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும். இதனால், அவை சட்டப்படி இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும்.
News January 19, 2026
இளைய தலைமுறைக்கு வழிவிடுங்க: நிதின் கட்கரி

முக்கியப் பொறுப்புகளை இளைய தலைமுறையினா் ஏற்கும் வகையில், பழைய தலைமுறையினா் ஓய்வை அறிவித்து அவா்களுக்கு வழிவிட வேண்டும் என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா். நாகபுரியில் நடைபெற உள்ள தொழில் முதலீட்டு மாநாடு முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பழைய தலைமுறையினா் படிப்படியாக பொறுப்புகளிலிருந்து விலகி, அனைத்தும் சரிவர செயல்படத் தொடங்கும்போது, ஓய்வுபெற வேண்டும் என்று கூறினார்.


