News April 6, 2025

19 ஆண்டுகளுக்குப் பின் பிடிபட்ட தம்பதி

image

மானூர் மேலபிள்ளையார் குளத்தைச் சேர்ந்த காளிதாஸ் கருப்பசாமி மாரியப்பன் ஆகியோரிடம் மதுரையைச் சேர்ந்த பிரேம்குமார் அவரது மனைவி காளிஸ்வரி இருவரும் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4,05,000 பணத்தை மோசடியில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து தேடப்பட்டு வந்த பிரேம்குமார் தம்பதியை கோவையில் இன்று போலீசார் கைது செய்தனர்.

Similar News

News April 6, 2025

இன்று இரவு காவல் அதிகாரிகள் பணி விவரம் அறிவிப்பு

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்ரல் 6 இரவு முதல் நாளை காலை வரை, இரவு காவல் பணியில் உள்ள போலீசார் விவரம், உட்கோட்ட காவல் நிலையங்கள் அளவில் தெரிவிக்கப்பட்டுள்ளன .அவர்களது தொடர்பு தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் உதவி தேவைப்படுவோர்கள் மேலே உள்ள புகைப்பட்டத்தில் இருக்கும் காவல் அதிகாரிகளின் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News April 6, 2025

அங்கன்வாடியில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளில் செயல்படும் குழந்தை மையங்களில் காலியாக உள்ள 95 முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், 10 குழு வட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 50 அங்கன்வாடி உதவி பணியாளர்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை www.icds.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News April 6, 2025

கைதி மரணம்: தண்டனை போலீசார் பாளை சிறையில் அடைப்பு

image

தூத்துக்குடியையை சேர்ந்த தொழிலாளி வின்சென்ட். போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்த வழக்கில் தற்போது டிஎஸ்பியாக இருந்து வரும் ராமகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்நிலையில் மருத்துவ சோதனைக்கு பின் அவர்கள் இன்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!