News April 29, 2025

19 வயது இளைஞர் தற்கொலை: குளித்தலை அருகே சோகம்!

image

குளித்தலை அருகே மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் அனில்குமார்(19). இவர் கடந்த மூன்று நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை குளித்தலை அருகே செல்லாண்டியம்மன் கோயில் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 17, 2025

JUST IN:கரூர் திமுக முப்பெரும் விழாவில் திடீர் மழை!

image

கரூர் கோடங்கிப்பட்டியில் இன்று நடைபெற்று வரும் திமுகவின் முப்பெரும் விழாவில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சிப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட மூத்த முன்னோடிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறார்.இந்தநிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென மழை பெய்தது. இதனால், விழாவில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்.

News September 17, 2025

கரூரில் முதலமைச்சரை வரவேற்ற ஆட்சியர்!

image

கரூர் மாவட்டத்தில் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ தலைமையில் நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்பொழுது கரூருக்கு வருகை புரிந்தமைக்காக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் புத்தகத்தை வழங்கி வரவேற்பு செய்தார்.

News September 17, 2025

திமுக முப்பெரும் விருதுகள் பெறுபவர்கள் யார்?

image

கரூர் மாவட்டம், கோடங்கிபட்டியில் செப்டம்பர் 17 இன்று நடைபெறும் முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் பெரியார் விருது எம்.பி கனிமொழி, அண்ணா விருது திரு.சீத்தாராமன், கலைஞர் விருது சோ.மா ராமச்சந்திரன், பாரிவேந்தன் விருது குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது மருதூர் ராமலிங்கம் மு.க.ஸ்டாலின் விருது பொங்கலூர் பழனிச்சாமி ஆறு நபர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்க உள்ளார்.

error: Content is protected !!