News August 18, 2024
18,720 பெண்கள் பயன்பெறுவார்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

சிப்காட் மெகா குடியிருப்பு மூலம் 18,720 பெண்கள் பயன்பெறவுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த குடியிருப்பை முழுவதுமாக பாக்ஸ்கான் நிறுவனம் எடுத்து கொள்கிறது. பணிபுரியும் பெண்களுக்கென்று தனி கிராமமே அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த கட்டிடத்திற்கான முழு நிதியை தமிழக அரசு தான் கொடுத்துள்ளது” என்றார்.
Similar News
News October 15, 2025
காஞ்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்..

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
காஞ்சிபுரம் மக்களுக்கு கலெக்டர் தீபாவளி வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். மேலும், அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டும் பட்டாசு வெடிக்குமாறு அறிவுறுத்தியதுடன், காஞ்சிபுரம் மக்களுக்கு தனது தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் ஆட்சியர் கலைச்செல்வி.
News October 14, 2025
காஞ்சிபுரம்: அரசு திட்டம் கிடைக்கவில்லையா..? இதை பண்ணுங்க

காஞ்சிபுரம் மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், <