News July 27, 2024

185 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி

image

தூத்துக்குடி சி வ அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு 185 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News April 3, 2026

தூத்துக்குடி: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News April 3, 2026

தூத்துக்குடி: மாணவி கொலை; குற்றவாளிக்கு காவல் நீட்டிப்பு

image

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12 ம் வகுப்பு மாணவி பாலியில் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தர்மமுனீஸ்வரன் நேற்று தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் காணொளி மூலம் ஆஜர்படுத்தபட்டார். வரும் 16 ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி பிரீத்தா உத்தரவிட்டார்.

News April 3, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 39 பேர் மனு தாக்கல்

image

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 30-ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்றுடன் இரண்டாவது நாளாக வேட்பு மனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ஆறு தொகுதிகளும் சேர்த்து மொத்தம் 39 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று பொது விடுமுறை என்பதால் மனு தாக்கல் கிடையாது. நாளை மனுதாக்கல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!