News March 20, 2024
பிப்ரவரியில் ரூ.18.2 லட்சம் கோடி யுபிஐ பரிவர்த்தனை

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.18.2 லட்சம் கோடிக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. ரொக்கமாக பணத்தை எடுத்து செல்ல விரும்பாதோர், யுபிஐ வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் 122 கோடி பரிவர்த்தனைகளின் மூலம் ரூ.18.2 லட்சம் கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் ரூ.40,000 கோடி முதல் ரூ.80,000 கோடி வரை பரிவர்த்தனை நடந்துள்ளது.
Similar News
News November 21, 2025
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

நாகை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ய உதவிடும் வகையில், சிறப்பு உதவி முகாம் வரும் நவ.22 & 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 21, 2025
கஸ்டமர்களை ஏமாற்றியதால் செக்!

ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும் போது, முதலில் விலை குறைவாக இருக்கும். ஆனால், பில்லிங்கின் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை பலரும் எதிர்கொண்டிருப்போம். இப்படி கஸ்டமர்களை ஏமாற்றுவதை ‘டார்க் பேட்டர்ன்’ மூலம் இ- காமர்ஸ் நிறுவனங்கள் செய்துவந்தன. இதற்கு மத்திய அரசு கடிவாளம் போட்ட நிலையில் Swiggy, Zomato உள்ளிட்ட 26 நிறுவனங்கள், டார்க் பேட்டர்ன்களை நீக்கியுள்ளன.
News November 21, 2025
2-வது டெஸ்ட்: கேப்டன் சுப்மன் கில் விலகல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் சுப்மன் கில் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18331700>>கழுத்து வலிக்கு<<>> சிறப்பு சிகிச்சை பெற அவர் மும்பை சென்றுள்ளதாகவும், பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை தொடங்கும் கவுஹாத்தி டெஸ்டில் கேப்டனாக பண்ட் செயல்படுவார் என்றும், பேட்டிங் வரிசையில் கில்லுக்கு பதிலாக சாய் சுதர்ஷன் இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.


