News October 28, 2024
18 வருஷமா பட்டாசு வெடி இல்லாத தீபாவளி
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த அமைந்துள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் இந்த சரணாலயத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வருவது வழக்கம். அதிக அளவில் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் பறவைகளை அச்சுறுத்தும் வண்ணம் சரணாலயத்தை சுற்றியுள்ள கிராமங்கள் கடந்த 18 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றன.
Similar News
News November 19, 2024
ஈரோடு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC GROUP 2/2A முதன்மை தேர்வுக்கான தேர்வுகள் மற்றும் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. எனவே பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் 94990-55943,0424-2275860 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கலாம்.
News November 19, 2024
சென்னிமலை அருகே ஏழு பேர் கைது
சென்னிமலை சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது சென்னிமலை அடுத்த முருகன் கோவில் பாறை என்ற இடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது. போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். கார்த்தி, அருணாச்சலம், சந்தோஷ் குமார், பரமசிவம் குருசாமி ஆகியோர் பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்தனர்.
News November 19, 2024
சென்னிமலையில் முன்னாள் பிரதமர் இந்திராவுக்கு மரியாதை
முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னிமலை வட்டார நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர தலைவர் S.செந்தில், M. சாதிக் பாட்ஷா மாவட்ட துணை தலைவர், வேலுசாமி மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி ப பங்கேற்றனர்.