News December 16, 2025

18-ம் தேதி சுழன்று அடிக்க உள்ள ‘தளபதி புயல்’

image

‘ஜனநாயகன்’ படத்தின் 2-ஆவது பாடல் வரும் 18-ம் தேதி வெளியாக உள்ளது. நேற்று வரையிலான பேரமைதி, 18-ம் தேதி பெரும் புயலுக்கான முன்னோட்டம் என குறிப்பிட்டு, தயாரிப்பு நிறுவனம் இதை அறிவித்துள்ளது. ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடைபெறும் அதே நாளில், இப்பாடல் வெளியாக உள்ளது. முன்னதாக, இப்படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ சமீபத்தில் வெளியாகி, பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

Similar News

News April 13, 2026

சனி தோஷத்தை விரட்ட இதுவே போதும்

image

ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி தந்நோ சனிப் ப்ரசோதயாத் பொருள்: ஓம், கொடியில் காக்கையை வைத்திருப்பவரை நினைத்துப் பார்க்கட்டும், ஓ, உள்ளங்கையில் வாளை ஏந்தியவரே, சனீஸ்வரர் என் எண்ணங்களை ஒளிரச் செய்யுங்கள். SHARE IT.

News April 13, 2026

சீனா மீது 50% வரி விதிக்க டிரம்ப் முடிவு

image

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகள் மீது 50% வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். சீனா ஈரானுக்கு ஏவுகணைகளை வழங்கி வருவதாக தகவல் கிடைப்பதாகவும், அது உறுதி செய்யப்பட்டால் அவர்களின் பொருள்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என கூறியுள்ளார். ஆனால் ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கவில்லை என <<19628794>>சீனா<<>> தரப்பில் ஏற்கெனவே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

News April 13, 2026

தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. தற்போது 1 அவுன்ஸ்(28g) 109 டாலர்கள் குறைந்து 4,653 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் ஒரு அவுன்ஸூக்கு 3 டாலர்கள் குறைந்து 73 டாலர்களுக்கு வர்த்தகமாகிறது. இதனால் நம்மூரிலும் இன்று தங்கம் விலை கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

error: Content is protected !!