News April 10, 2025
18 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்டிரல் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் உள்பட 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை இடையேயான ரயில் நிலைய பாதையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
Similar News
News October 10, 2025
கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்

திருச்சியை சேர்ந்த கல்பனா குடும்பத்துடன் அந்தமானில் வசித்து வருகிறார். கடந்த 3மாதங்களுக்கு முன்உடல் நலக்குறைவு காரணமாக சொந்த ஊருக்கு வந்த கல்பனாவை, அவரது அக்கா மலர் கவனித்து வந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து தங்கை கல்பனா அந்தமான் புறப்பட்ட போது, வழியனுப்ப வந்த மலர், பிரிய மனமில்லாமல் மயங்கி விழுந்தார். இருவரின் பாச போராட்டத்தால், தங்கை வீடு திரும்பினார். இதனால் விமானம் தாமதமாக புறப்பட்டது.
News October 10, 2025
சென்னை: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.
News October 9, 2025
மநீம அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலையில் நடிகர் விஜய் வீட்டிற்கு தனியார் நிறுவன ஊழியர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானது குறிப்பிடத்தக்கது.