News May 7, 2024

விரைவில் வருகிறது 17ஆவது தவணைத் தொகை

image

PM கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6000, 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் நிலையில், இதுவரை 16 தவணைகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 17ஆவது தவணைப் பணம் ஜூன் மாதம் கடைசி வாரம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Similar News

News September 24, 2025

மோசடி வழக்கில் சூர்யா வீட்டு பணி பெண் உட்பட 4 பேர் கைது

image

நடிகர் சூரியாவுக்கு 2021-ம் ஆண்டு முதல் தனி பாதுகாவலராக உள்ளவர் அந்தோணி. இவர் சூர்யா வீட்டில் வேலை செய்யும் சுலோச்சனாவின் மகன் நடத்தும் தங்க நாணயம் திட்டத்தில் ₹50 லட்சம் வரை டெபாசிட் செய்து ஏமாந்துள்ளார். ₹50 லட்சத்தில் ₹7 லட்சம் மட்டுமே அந்தோணிக்கு திரும்ப கிடைத்ததால், அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சுலோச்சனா, அவரது மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News September 24, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 24, புரட்டாசி 8 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை:10:30 AM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை

News September 24, 2025

PhonePe, CRED-ல் இனி இந்த சேவையை பெற முடியாது

image

PhonePe, CRED போன்ற ஃபின்டெக் செயலிகளை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் அம்சம் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்களின் அடையாளங்கள் முழுமையாக சரிபார்க்கப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், RBI-ன் புதிய விதி, மேற்கூறிய சேவையை நிறுத்தியுள்ளது. இனி நெட்பேங்கிங், UPI, NEFT மற்றும் காசோலை மூலம் மட்டுமே வாடகை செலுத்த முடியும்.

error: Content is protected !!