News April 2, 2025

1,777 அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள்!

image

படிக்கட்டு பயணத்தை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழங்ககளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் தானியங்கி கதவு அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் கோட்டத்தில் இதுவரை 1,777 பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு  கொண்டுவரப்பட்டுள்ளது. மீதியுள்ள 891 பஸ்களுக்கு தானியங்களி கதவு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறினர்.

Similar News

News April 4, 2025

சேலத்தில் மாணவி தற்கொலை!

image

எடப்பாடி அருகே முத்தையம்பட்டி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தனியார் நீட் பயிற்சி மையத்தில். கடந்த 10 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். நீட் தேர்வு கடினமாக இருப்பதாகவும், தன்னால் தேர்வில் வெற்றி பெற முடியாது என்றும் கடந்த 31ஆம் தேதி விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

News April 3, 2025

தோல் வியாதி நீக்கும் சித்தேசுவரர் கோயில்

image

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோயில். தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து உப்பு, மிளகு, வெல்லம் ஆகியவற்றை தலையைச் சுற்றி, பாதிக்கப்பட்ட தோல் பகுதியைச் சுற்றி கோயிலின் காந்த குளத்தில் போட்டால் தோல் வியாதி குணமாகும் என்பது நம்பிக்கை. இந்தப் பிரச்சனை உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 3, 2025

சேலம் வழியாக செல்லும் முக்கிய ரயில் நாளை ரத்து

image

யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் சேலம், ஆத்தூர் வழியாக இயக்கப்படும் யஷ்வந்த்பூர்- புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில் (16573) நாளையும், மறுமார்க்கத்தில், புதுச்சேரி- யஷ்வந்த்பூர் ரயில் (16574) நாளை மறுநாளும் (ஏப்ரல் 05) முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!